- வாடிக்கையாளர்கள் தமது இணையத்தளங்கள் தொடர்பான பிரச்சனைகள், சந்தேகங்கள், மற்றும் கேள்விகளை Support Ticket கோரிக்கைகளாக அஸிஸ்ரியா நிறுவனத்திடம் கோர முடியும். இது இலவச சேவையாகும்.
- எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஒரே தலைப்பின் கீழ் தொடராமல் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தனிப்பட்ட TICKET களை உருவாக்க வேண்டும் என நாங்கள் கோருகின்றோம்.
- வழக்கமாக, எங்கள் இலவச Support Ticket அமைப்பு உங்கள் கோரிக்கைக்கு 14 நாட்களுக்குள் பதிலளிக்கும். நீங்கள் விரைவான ஆதரவு சேவையைப் பெற விரும்பினால் கட்டண விருப்பமும் (Premium Support Packages) உள்ளது.
- நிலுவையிலுள்ள கட்டணத்தை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, எங்கள் டிக்கெட் அமைப்பு கோரிக்கையை ஆதரிக்காது மற்றும் உங்கள் Bill செலுத்தப்படும் வரை உங்கள் டிக்கெட்டை நிலுவையில் வைத்திருக்கும்.
- எங்கள் டிக்கெட் அமைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஒரே சிக்கலைக் குறிக்கும் ஏதேனும் நகல்களை நீங்கள் உருவாக்குவதை தவிர்க்கவும்.
- இணையத்தள பிழை ஏற்பட்டால், உங்கள் ஆதரவு டிக்கெட் சமர்ப்பிப்புடன் ஸ்கிரீன் ஷாட்டையும் (Screenshot) இணைத்தால் அது உங்களின் பிரச்சனைகளுக்கு விரைவாக பதில் வழங்க உதவியாக இருக்கும்.
- எந்தவொரு ஃபோன் (Phone Call) அழைப்புகளுக்கும், WhatsApp Message/Call இல் உங்களின் இணையத்தள பிரச்சனைகளை தெரிவிப்பதில் அஸிஸ்ரியா நிறுவனம் பதிலளிக்காது என்பதை எங்கள் வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும், மேலும் உங்கள் திட்டம் தொடர்பான ஏதேனும் சிக்கல்கள் அல்லது புதுப்பிப்புகளுக்கு எங்கள் CRM மூலம் டிக்கெட்டுகளை உருவாக்குமாறு எங்கள் வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
- எமது நிறுவனத்தில் மின்னஞ்சல் (Email) மற்றும் டிக்கெட் (Ticket) மூலமாக மாத்திரமே உங்கள் இணையத்தளம் தொடர்பான பிரச்சனைகளை முறையிட முடியும். எமது எந்த ஊழியர்களுக்கும் Phone Call அல்லது WhatsApp Message மூலம் நீங்கள் அனுப்பும் தகவல்களுக்கு எமது நிறுவனம் பொறுப்பேற்காது.
நாம் இணையத்தள வடிவமைப்பு சேவையை வழங்கும் போது அதற்கான சேவைக்கட்டணத்தை மாத்திரமே அறவிடுகின்றோம். எனவே வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால இடைவெளியில் இலவச Support Ticket சேவையை வழங்குகின்றோம். குறுகிய கால (Premium Support) சேவையை மேலதிகமாக கட்டண அடிப்படையில் பெற முடியும்.
உங்கள் நிறுவன ஊழியர்களுக்கு இணையத்தள பராமரிப்பு தொடர்பாக ப்யிற்றுவிப்பதற்கு மேலதிகமாக உரிய நேரத்திற்கான கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
இணையத்தளம் வாடிக்கையாளரிடம் வழங்கப்பட்ட பின்னர் அல்லது வடிவமைக்கும் போது வாடிக்கையாளர் கோரும் புதிய விடயங்களுக்கு மற்றும் செய்யப்படும் மாற்றங்களுக்கு மேலதிக கட்டணங்கள் அறவிடப்படலாம்.
அஸிஸ்ரியா நிறுவனத்தின் இணையத்தள குறியீட்டு கோப்புகளுக்கான (Code Access) அணுகலை வாடிக்கையாளர்களுக்கு வழங்காது, எனினும் வாடிக்கையாளர்கள் கோரிக்கையாக கேட்கும்பட்சத்தில் முழுமையான அணுகல் வழங்கப்படும். வழங்கப்பட்ட பின் இணையத்தளத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கு எந்த விதமான பொறுப்பையும் Assistia நிறுவனம் ஏற்காது.